கிணற்றில் குளிக்க சென்ற கபடி வீரர் பலி.

59பார்த்தது
கிணற்றில் குளிக்க சென்ற கபடி வீரர் பலி.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கிணற்றில் குளிக்க சென்ற கபடி வீரர் பலியானார்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த குமாரின் மகன் தருண் (17), என்பவர் கபடி விளையாட்டு வீரர் ஆவார். இவர் உசிலம்பட்டி அருகே உள்ள ஆரியபட்டி கிராமத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்க தனது நண்பர்களுடன் வந்திருந்தார். கபடி போட்டி முடிந்ததும் அப்பகுதியில் உள்ள கிணற்றில் நண்பர்கள் குளித்து கொண்டடிருந்தனர், கிணற்றின் மேட்டுப் பகுதியில் அமர்ந்திருந்த தருண் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் தண்ணீருக்கு அடியில் சென்றுவிட்டார். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான தருண் உடலைக் கைப்பற்றி உசிலம்பட்டி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி