வில்லாபுரத்தில் சித்த மருத்துவ முகாம்.

71பார்த்தது
வில்லாபுரத்தில் சித்த மருத்துவ முகாம்.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விழாவை முன்னிட்டு வில்லாபுரம் பகுதியில் காங்கிரஸ் மனித உரிமை கட்சி சார்பில் சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் காங்கிரஸ் மனித உரிமைகள் துறை ஆன்மீக அணி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது இந்த விழாவிற்கு மனித உரிமைகள் துறை ஆன்மீக பிரிவு மாநில தலைவர் கூடலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மணிகண்டன், வெண்ணிலா முன்னிலை வகித்தனர். ஆன்மீகப் பிரிவு மாநிலம் துணைத் தலைவர் கண்ணன் பொதுச்செயலாளர் தவமணி ஆகியோர். வரவேற்புரை கூறினர். விழாவின் சிறப்பு விருந்தினராக மாநில மனித உரிமைகள் பிரிவு மாநிலத் தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் மற்றும் 54வது வார்டு மாமன்ற உறுப்பினர் நூர்ஜகான் ஆகியோர் கலந்துகொண்டு சித்த மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். சித்த மருத்துவ முகாமில் வில்லாபுரம் மீனாட்சி நகர் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்

தொடர்புடைய செய்தி