குரங்கு அம்மைக்கான பரிசோதனை மையம் திறப்பு.

61பார்த்தது
மதுரை விமான நிலையத்தில் வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை நோய்க்கான சிறப்பு பரிசோதனை மையத்தை சுகாதாரத்துறை இணை இயக்குநர் Dr. குமரகுரு துவக்கி வைத்தார். சர்வதேச அளவில் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை எனப்படும் எம் பாக்ஸ் எனும் நோய் விலங்குகள் மூலம் மனிதனுக்கு வேகமாக பரவி வருகிறது.

ஆப்பிரிக்காவில் தோன்றிய இந்த நோய் தற்போது ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துரை அமைச்சரகம் மாநில அரசுகளுக்கு குரங்கு அம்மை குறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையம், துறைமுகம் ஆகிய இடங்களில் இறங்கிய பயணிகளை பரிசோதனைக்கு பின் வெளியே அனுமதிக்க வேண்டும் என்றும் குரங்கு நோயை அறிகுறிகள் தென்பட்டால் அவரை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் 21 நாட்களுக்குள் ஆப்பிரிக்கா நாட்டிற் சென்றாலோ அல்லது குரங்கு அம்மை நோய் தாக்குதலுக்கு உள்ளான நாடுகளுக்கு சென்றிருந்தால் அந்த பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப் படுவார்கள். மேலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் தனி சிகிட்சை பிரிவில் 20 பெட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் குரங்கு அம்மை நோய் (M BOX) நோய் தொற்று அறிகுறி தென்பட்டால் அவர்களின் ரத்தம் பரிசோதனைக்கு எடுத்து தனிமைபடுத்தப் படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி