சமையலர் மீது கொதிக்கும் நீர் கொட்டியதால் பலி.

71பார்த்தது
சமையலர் மீது கொதிக்கும் நீர் கொட்டியதால் பலி.
மதுரை திருப்பரங்குன்றம் திருமண மண்டபத்தில் சமையலர் மீது கொதிக்கும் நீர் கொட்டியதால் உயிரிழந்தார்.

மதுரை நிலையூர்
கைத்தறி நகர் மாருதி காலனியை சேர்ந்தவர் சுதர்சன் (51) என்பவர் கேட்டரிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சமையல் கொண்டிருந்தார். செய்துபோது அண்டாவில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீர் தவறி கொட்டியது. இதனால் உடல் வெந்தது. அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மனைவி ராணி திருப்பரங்குன்றம் காவல் புகார் அளித்துள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :