நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் இன்று (நவ. 06) வெளியிட்டுள்ள பதிவில், “மிரட்டலுக்கும், தாக்குதலுக்கும் என்றும் நான் அடிபணிய மாட்டேன். பின்வாங்கவே மாட்டேன் என்ற என் பிடிவாதம் சகோதர மனப்பான்மையுடன் அறிவுறுத்தியதால் தான் தளர்ந்தது. மீண்டும் மீண்டும் சொல்கிறேன், தெலுங்கர் என்றோ தெலுங்கு மக்கள் குறித்தோ நான் பேசவே இல்லை, தெலுங்கு என்று பேசியதை வாபஸ் பெறுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.