மதுரை அருகே பஞ்சு மில்லில் தீ விபத்து.

56பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றம் அவனியாபுரம் செல்லும் திருமலையூர் சாலையில் உள்ள எவர்கிரின் கார்டன் காமாட்சி பஞ்சு மில்லில் தீவிபத்து ஏற்பட்டதால் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மதுரை தனக்கள்குளம் கள்ளர் பள்ளி எதிரே குடியிருக்கும். மார்கண்டன் ( 38) இவரது மனைவி ரேகா ( 32) என்பவரது பெயரில் திருப்பரங்குன்றம் அவனியாபுரம் செல்லும் வழியில் திருமலையூர் சாலையில் எவர்கிரின் கார்டன் பகுதியில் காமாட்சி பஞ்சு மில் நடத்தி வருகிறார்.

இங்கு மெத்தை தலையணைக்கு தேவையான இலவம் பஞ்சு மூலம் தயாரித்து விற்பனை செய்கிறார்.
இன்று மதியம் பகல் 2 மணியளவில் கம்பெனியில் மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனே வேலை செய்த ஊழியர்கள் கட்டடத்திலிருந்து வெளியே வந்தனர். இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
கம்பெனியில் பற்றிய தீ வெளியே உள்ள பஞ்சு மூடைகளிலும் தீப்பற்றி எரிய துவங்கியது.

இது குறித்து தகவறிந்து வந்த திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வாகனம் திருப்பரங்குன்றம் போலீசார் ஆகியோர் விரைந்து வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் தீப்பற்றி எரிந்து நாசம் அடைந்ததாக கூறப்படுகிறது விபத்து குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி