போதையில்லா சமூகம். மாணவர்களின் குழுவை தொடங்கி வைத்த ஆணையர்.

50பார்த்தது
போதையில்லா சமூகம். மாணவர்களின் குழுவை தொடங்கி வைத்த ஆணையர்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள மன்னர் கல்லூரியில் இன்று காவல் ஆணையர் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ. கா. ப. , அவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குதல் என்னும் கருத்தை மையமாகக் கொண்டு மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இன்று"சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகம் "-எனும் தலைப்பிலான மாணவர் குழுக்களை ( Road safety club & Anti - Drug club) துவக்கி வைத்தார். மேலும் சாலையில் கவனக்குறைவு, தேவையில்லாத நபர்களின் பழக்கத்தின் வழியாக வரும் போதை பொருள் பழக்கம் ஆகியவற்றில் இருந்து மாணவர்கள் விலகி நிற்பதற்கான அறிவுரைகளையும் வழங்கினார்.

சாலை பாதுகாப்பு குழு மாணவர்களுக்கு தலைக்கவசம், டீ சர்ட் , தொப்பி ஆகியவற்றை வழங்கினார்.
மேலும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் இல்லாத சமுதாயம் உருவாக மாணவரின் கடமை எனும் தலைப்பிலும், சாலை பாதுகாப்பு எனும் தலைப்பிலும் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர்கள் , காவல்துறையினர் மற்றும் 2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி