மதுரை அருகே 16 வயதுடைய பெண் மாயம்

73பார்த்தது
மதுரை அருகே 16 வயதுடைய பெண் மாயம்
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இளம் பெண் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை நாகமலை புதுக்கோட்டை மேற்கு தெருவை சேர்ந்த ரமேஷ் குமாரின் 16 வயதுடைய மகளை திருச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக அவரது தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு ரமேஷ்குமார் பெண்ணிற்கு திருமண வயது வரட்டும் அப்போது தான் திருமணம் என கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 10. 30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதால் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெண்ணின் தாயார் பாண்டியம்மாள் நேற்று நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி