மதுரை மாவட்டம், தே. கல்லுப்பட்டி அருகே உள்ள தேவன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி மனோசித்ரா (34) என்பவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த பாலவிக்னேஷ் மனைவி இந்துமதிக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (அக். 29) இரவு மனோசித்ரா, தனது குடும்பத்தினருடன் வீட்டின் முன் அமர்ந்திருந்தபோது அங்கு வந்த இந்துமதி தரப்பினர் அவரிடம் தகராறில் ஈடுபட்ட போது இரு தரப்பினரும் மோதிக் கொண்டதில் மனோசித்ராவும், மற்றொரு தரப்பில் இந்துமதியும் பலத்த காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக மனோசித்ரா அளித்தப் புகாரின்பேரில், இந்துமதி (32), , பானுமகி (28), ராஜேஸ்வரி (48), பாலா (22) ஆகிய மீதும், மற்றொரு தரப்பில் இந்துமதி அளித்தப் புகாரின்பேரில், லதா (54), மனோசித்ரா (34), சங்கர் (36) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.