சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலம் முழுவதும் கடையடைப்பு
திருமங்கலம்: மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலம் நக
ர் முழுவதும் உள்ள 2000த்திற்கும் மேற்பட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் ஏதும் நடைபெற்று விடக்கூடாது என்று கப்பலூர் சுங்கச்சாவடி அருகே 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடும் கட்டுப்பாட்டுகளுடன் வாகனங்கள் கப்பலூர் சுங்கச்சாவடியை கடந்து வருகின்றன. இதனால் கப்பலூர் சுங்கச்சாவடியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.