திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாக திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாகன உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் அனைத்து கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்து வருகின்றன.
இதில் ஒரு பகுதியாக உள்ளூர் மக்களுக்கு இடையூறாகவும் சட்ட விரோதமாகவும் அமைக்கப்பட்டுள்ள கப்பலூர் சுபச்சாவடி அகற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாகும்வரை உண்ணாவிர
போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் காளிதாஸ் தலைமையில் அக்கட்சியினர் சுங்கச்சாவடி அருகே திரண்டு சாகும்வரை உண்ணாவிரதப்
போராட்டம் இருக்க முயன்றனர் போது திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிற முயன்றவர்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.