மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் நேற்று (செப் 16) மாலை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
மதுரை திருமங்கலம் டோல்கேட் கட்டண உயர்வை கண்டித்து நேற்று (செப் 16) மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கப்பலுார் சுங்க சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இதில் த. ம. மு. க. , மாநில துணை பொதுச்செயலாளர் மைதீன் சேட்கான் தலைமையில் கட்டண உயர்வை கண்டித்தும், கப்பலுார் டோல்கேட்டை இடமாற்ற கோரியும் டோல்கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில அமைப்பு செயலாளர் காதர் மைதீன், மனிதநேய மக்கள் கட்சி மதுரை தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து போலீசார் சுமார் 400க்கும் மேற்பட்டோரை கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இப்போராட்டத்தால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் கஷ்டப்பட்டனர்.