திருமங்கலம்: மதுரை மாவட்டம் பேரையூர் டிஎஸ்பி இலக்கிய உத்தரவின் பேரில் சாப்டூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அணைக்கரைப்பட்டியில் கன்னியப்பன் 65 என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
அதேபோல் சின்னக்கட்டளையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பாண்டியை போலீசார் கைது செய்தனர்.