மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ வல்லாளப்பட்டி சாலையில் இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதி விபத்தானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 28 வயதுடைய நபர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.