மதுரை கொட்டாம்பட்டி சேர்ந்தவர் உதயகுமார் தனது வீட்டு அருகே ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். நேற்றிரவு டூவீலரில் வந்த 2 நபர்கள் அவரது ஆட்டை கடத்தி தப்ப முயன்றனர். இவர் சத்தம் போடவே, ஊர் மக்கள் திரண்டு அவர்களை விரட்டி பிடித்தனர். அவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த இருவர் என தெரிந்தது. இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் அவர்களை இன்று கைது செய்து விசாரிக்கின்றனர்.