மேலூர் சுப்ரீம் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலூர் சுப்ரீம் லயன்ஸ் சங்கத்தின் 2024- 2025ம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கடந்த 25 ந்தேதி லதா திருமண மஹாலில் நடைபெற்றது.
தலைவராக கே. சந்தனபிரபு, செயலாளராக ஜெ. சந்தோஷ்குமார், பொருளாராக எஸ். சேவுகமூர்த்தி ஆகியோர் பதவியேற்று கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் ஆர். கே. தங்கராஜ், இன்ஜினியர் பி. முருகேசன், கள்ளந்திரி எம். முத்துராமலிங்கம், டாக்டர். கதிரேசன், எஸ். பி. மெய்யப்பன், காவல்துறை சார்பு ஆய்வாளர் வி. பழனியாண்டி, ஏ. வைரமுத்து, மண்டல தலைவர் என். கண்ணன், வட்டாரத் தலைவர் எஸ். சரவணன் மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, மேலூர் நகர்மன்ற உறுப்பினர் திவாகர் தமிழரசன், மேலூர் சுப்ரீம் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.