தாம் தாக்கல் செய்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அறப்போர் இயக்கத்திற்கு எதிரான அவதூறு வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 2019-21ல் நெடுஞ்சாலை ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது. ஒப்பந்த முறைகேட்டில் ரூ.692 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.