எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு

68பார்த்தது
எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு
கோவை இருகூரிலிருந்து கர்நாடகாவின் தேவனஹல்லி வரை 270 கிமீ தொலைவுக்கு எண்ணெய் குழாய் அமைக்கப்படுகிறது. இதில், கோவையிலிருந்து திருப்பூர் முத்தூர் வரை 70 கிமீ தொலைவிற்கு விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கப்படவுள்ளது. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும் என அஞ்சுகின்றனர். எதிர்ப்புக்கு மத்தியில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று மீண்டும் பணிகள் துவங்கப்பட்டது. விவசாயிகள், சூலூர் திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி