மதுரை மாவட்டம் மேலூர் அருகே, நொண்டிகோவில்பட்டியை சேர்ந்த பாக்கியம் (60) நேற்று (மார்ச். 26) இரவு முசுண்டகிரிபட்டியில் தனது தங்கை கஸ்தூரியை பார்த்துவிட்டு மேலூர் செல்ல பஸ் ஏறுவதற்காக நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது மதுரையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.