மதுரை மாவட்டம் மேலூரில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அக்கடிதத்தில், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது. இது போன்ற சுரங்கத்தொழிலை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒரு போதும் அனுமதிக்காது எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.