குருவார அஷ்டமி பூஜை.

77பார்த்தது
மேலூர் அருகே சிவாலயபுரத்தில் குருவார தேய்பிறை அஷ்டமி" பூஜை, அருள்மிகு காலபைரவர் சுவாமிக்கு சிறப்பு அலங்கார வழிபாடு நடைபெற்றது.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை, அர்ச்சனை அலங்கார வழிபாடு இன்று நடைபெற்றது.
அருள்மிகு காலபைரவர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில், வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பக்தர்கள் கோளறு பதிகம், பைரவர் அஷ்டகம் பைரவர் 108 போற்றி தேவாரம், திருவாசகம், சிவபுராணம் பாராயணம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி