மதுரை மாவட்டம் மேலூரில் நேற்று அமைச்சர் தலைமையில் திமுகவினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூர் நகர திமுக சார்பில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் அழகர் கோவில் சாலையில் உள்ள சி. கே. திருமண மஹாலில் நடைபெற்றது.
இதில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
உடன் மேலூர் தொகுதி பொறுப்பாளர் வ. து. ந. ஆனந்த், தலைமை கழக செயற்குழு உறுப்பினர் கரு. தியாகராஜன், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், மாவட்ட அவை தலைவர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் சோமசுந்தரபாண்டியன் , மேலூர் நகர் கழக செயலாளரும், நகர்மன்ற தலைவர் முகமது யாசின், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதா பேகம் அப்பாஸ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் தற்காகுடி சரவணன், நகர் நிர்வாகிகள் ரவி, கொன்னடியான், மகேந்திரன், மயில்வாகனன், நீதிபதி, ராஜேந்திரன், இளஞ்செழியன், நகர்மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.