"மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம் 540 மனுக்கள்.

56பார்த்தது
"மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம் 540 மனுக்கள்.
மதுரை மாவட்டம் தும்பைபட்டியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 540 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தும்பைபட்டி, அட்டப்பட்டி, பூதமங்கலம், கொடுக்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்டமுகாம் தியாகி கக்கன்ஜி மணி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், உலகநாதன், கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், மாவட்ட கவுன்சிலர் ராஜராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தும்பைப்பட்டி அயூப்கான், அட்டப்பட்டி கிருஷ்ணன், பூதமங்கலம் சாந்தி சின்னக்கருப்பன், கொடுக்கம்பட்டி செல்லையா, மேலூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்
லயனல் ராஜ்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்தையா, கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய திமுக துணை செயலாளர்கள் சொ. ராஜா, மாவட்ட பிரதிநிதி கண்ணன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்கள் கணேசன், ராஜேந்திரன், பாண்டிச். செல்வம், ரூபா,
கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாமில் 540 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

தொடர்புடைய செய்தி