இளைஞரின் உறுப்புகள் தானம்

1933பார்த்தது
இளைஞரின் உறுப்புகள் தானம்
மதுரை தெற்கு மாரட் வீதி ஜெய்சங்கர் மகன் கார்த்திக் ராஜா 22. விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. ஜன. 1 காலை 8: 30 மணிக்கு நத்தம் பைபாஸ் ரோட்டில் நண்பருடன் டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்ற கார்த்திக் ராஜா தவறி விழுந்தார். தலையில் அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் மூளைச்சாவு அடைந்தார். உடல் உறுப்புகளை தானமாக தர தந்தை ஜெய்சங்கர் ஒப்புதல் அளித்தார். இதயம் சென்னை எம். ஜி. எம். , மருத்துவமனைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டது. சிறுநீரகங்கள் மதுரை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் கார்த்திக்ராஜா உடலுக்கு அரசு சார்பில் கலெக்டர் சங்கீதாஅஞ்சலி செலுத்தினார். உறுப்புகளை கொண்டு செல்ல தடையில்லா போக்குவரத்து ஏற்பாடுகளை துணைகமிஷனர் குமார், கூடுதல் துணைகமிஷனர் திருமலைக்குமார் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி