உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜுன்-5 அன்று திருநகர் அண்ணா பூங்காவில். புவி வெப்பமயமாதல், புகை, ஒலி மாசுபாடுதல், பூமியை சீரழிக்கும் பாலிதீன் குப்பைகள், மருத்துவக்கழிவுகள், இறைச்சிக்கழிவுகள், குப்பைகளை நீர்நிலைகள், தெருக்களில் நாசம் செய்தல் போன்ற மனித செயல்பாடுகளை செய்யமாட்டோம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பைகள் வழங்கி. பூங்காவினுள் பெண்கள், குழந்தைகளால் மரக்கன்றுகள் நட்டு சிறப்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி சிவசங்கர், வாழவந்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் நிகழ்வில் தன்னார்வலர்கள், நடைப்பயிற்சி குழுவினர், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.