கூட்டம் கூட்டமாக செல்லும் மாடுகள் கட்டுபடுத்துமா மாநகராட்சி

70பார்த்தது
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இல்லத்தின் முன்பாகவும், மாவட்ட நீதிபதிகள் குடியிருப்புகள் அமைந்துள்ள சாலை மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலக சாலை மற்றும் காவல்துறை குடியிருப்பு, DRO காலனி, ரேஸ்கோர்ஸ்காலனி , ஆத்திகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் கூட்டம் கூட்டமாக மாடுகள் சாலைகளில் சுற்றிதிரிகிறது.

மாடுகள் திடிரென சாலைகளில் செல்லும்போது கூட்டமாக ஓடும்போது வாகனங்களில் வருபவர்கள் மீது மோதி விடுவதால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகிவருகின்றனர். இதேபோன்று வைகையாற்றை ஒட்டியுள்ள பிரதான சாலையில் குதிரைகளையும் சுற்றிதிரிவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.

கால்நடை வளர்ப்பவர்கள் பால் விற்பனைக்காக வளர்க்கும் பசுமாடுகளையும் சாலைகளில் கண்டுகொள்ளாமல் சுற்றிதிரிய விடுவதால் தொடர்ந்து விபத்து ஏற்படுகிறது. மாநகராட்சி சார்பில் பலமுறை எச்சரிக்கை விடுத்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் பொதுமக்களின் உயிர்களுக்கு ஆபத்தை உருவாக்கிவருகின்றனர்.

எனவே உயிரிழப்பு போன்ற அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுப்பதோடு கால்நடைகள் சுற்றி திரிவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி