மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர் சிவமுருகன். இவரது மனைவி கௌரி செல்வி. இவர்கள் இருவரும் திருமங்கலம் ராஜபாளையம் சந்திப்பு வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
கணவர் பைக் ஓட்ட, மனைவி கௌரிசெல்வி பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது அந்த வழியாகச் சென்ற கார் அவர்கள் சென்ற பைக்கின் மீது மோதியது. இதில் இருவரும் தலைகுப்புற கீழே விழுந்தனர்.
இதில் பலமாக அடிபட்ட கௌரி செல்வியை சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கௌரி செல்வி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கௌரி செல்வியின் தந்தை அருணாச்சலம் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விபத்து குறித்தும் கௌரி செல்வி சாவு குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.