கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

1518பார்த்தது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
மதுரை காளவாசல் பகுதியில் நேற்று போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் மதுரை நடுமுதலைகுளத்தை சேர்ந்த அபிசேக் (23), என்பவரிடம் 5 கிராம் எடையுள்ள 20 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும் கரிமேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் மதுரை‌ விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்த ராஜகுரு (22) என்பவரது வீட்டிலிருந்து வாங்கி வருவதாக சொன்னதன்பேரில், ராஜகுரு வீட்டை சோதனை செய்ததில் 2 1/2 கிலோ கஞ்சா, மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி