டாஸ்மாக் கேசியரிடம் பணம் பறித்த இருவர் கைது

62பார்த்தது
டாஸ்மாக் கேசியரிடம் பணம் பறித்த இருவர் கைது
டாஸ்மாக் கேசியரிடம் பணம் பறித்த இருவர் கைது

மதுரை, வில்லாபுரம், மீனாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (42). இவர், தபால்தந்தி நகர், பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் கேசியராக வேலை செய்து வருகிறார்.

நேற்று இவர் கடையில் நின்றிருந்தபோது, டூவீலரில் வந்த இருவர் உடனடியாக பாரை திறக்கவேண்டுமென கூறியுள்ளனர். அவர், 11 மணிக்கு தான் பார் திறக்க அனுமதி உள்ளதாக கூறியதால் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, கத்தியை காட்டி மிரட்டி கணேசமூர்த்தியிடம் இருந்து, ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிந்து பணம் பறித்துக்கொன்ற தலைமறைவான ஆனையூரை சேர்ந்த அருள்முருகன் (41), கே. புதூரை சேர்ந்த தண்டீஸ்வரன் (34) ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி