மதுரையில் இன்று மாலை பெய்த மழையால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுரையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இன்று வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் மாலையில் கருமேகங்கள் சூழ இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் குளுமையான சூழல் காணப்பட்டது. மழையில் சிறு குழந்தைகள் ஆடி மகிழ்ந்தனர்.
சுமார் கால் மணிநேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல ஓடியது.