கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்

80பார்த்தது
கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் அமைந்துள்ள அருளானந்தர் கல்லூரியில் காலை மாலை என, இரு நேர வகுப்பு அடிப்படையில் மாணவ மாணவிகளுக்கு கல்வி அளிக்கப்பட்டு வந்தது.


இந்நிலையில், பகுதி நேரம் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் மீதமுள்ள நேரத்தில் பகுதி நேர வேலைக்கு செல்வதாக கூறி தவறான வழிகளில் ஈடுபட்டு வருவதோடு, படிப்பிலும் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகி வருவதாக மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் பகுதி நேர வகுப்புகளை முழு நேர வகுப்புகளாக மாற்றியமைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் முழு நேர வகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் சிப்ட் அடிப்படையில் காலை,
மாலை நேர வகுப்புகளை நடத்த வேண்டும் என, வலியுறுத்தி இன்று கல்லூரி முன்பு 100க்கும் அதிகமான மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு மாணவர்கள் கல்லூரிக்குள் சென்றனர்.

தொடர்புடைய செய்தி