பூக்களின் விலை மும்மடங்கு உயர்வு.

83பார்த்தது
பூக்களின் விலை மும்மடங்கு உயர்வு.
மதுரையில் பூக்களின் அதிரடி விலை உயர்வால் வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணி மற்றும் வில்லாபுரம் பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை மும்மடங்கு உயர்ந்துள்ளது.

பூமார்க்கெட்டில் சம்பங்கி ரூ. 300, ரோஸ் ரூ. 300, கோழிக் கொண்டை ரூ. 100, செவ்வந்தி பூ ரூ. 400, என விற்பனை நடைபெறுகிறது. இது கடந்த வாரத்தின் விலையை விட மும்மடங்கு உயர்வு என கருத்து தெரிவித்த வியாபாரிகள் சித்திரை வருடப் பிறப்பால் இந்த விலை உயர்வு என தெரிவித்தனர்.

ஆனால் 1கிலோ மல்லிகைப்பூ ரூ. 5 ஆயிரம் வரைக்கும் சென்ற நிலையில் தற்போது 1கிலோ ரூ. 300க்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி