மதுரை மக்களவைத் தொகுதியில் மீண்டும் இரண்டாவது முறையாக திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து மதுரை மாநகர் முழுவதும் சு வெங்கடேசன் புகைப்படத்தை சுட்டிக்காட்டி யாரென்று புரிகிறதா இவர் தீ என்று தெரிகிறதா? என வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டி மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.