எரிவாயு வெடித்து இளம்பெண் உயிரிழப்பு

56பார்த்தது
எரிவாயு வெடித்து இளம்பெண் உயிரிழப்பு
மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை தென்பழஞ்சி வெள்ளாபட்டி மேல தெருவை சேர்ந்தவர் செழியன். இவர் மனைவி பஞ்சு 33. இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது சிலிண்டருக்கும் அடுப்பிற்கும் இணைக்கப்பட்டிருக்கும் கேஸ் டியூப் திடீரென்று கழன்றது. அதிலிருந்து வெளியேறிய கேஸில் தீ பற்றியது.

இதில் பஞ்சுவின் ஆடையிலம் தீப்பிடித்தது. இதில் தீயில் கருகிய நிலையில் நிலையில் உயிருக்கு போராடிய மஞ்சுவை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பஞ்சு உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கணவர் செழியன் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த தீ விபத்து குறித்தும் பஞ்சுவின் சாவு குறித்தும், விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி