மதுரையில் சு. வெங்கடேசனை கண்டித்து பாஜக - வினர் ஆர்பாட்டம்

58பார்த்தது
மதுரையில் சு. வெங்கடேசனை கண்டித்து பாஜக - வினர் ஆர்பாட்டம்

செங்கோல் தொடர்பாக பாராளுமன்றத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பேசியதை கண்டித்து மதுரையில் பாஜக - வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற உரையின் போது மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்
" செங்கோலை வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் தனது அந்தப்புரத்திலே எத்தனை பெண்களை அடிமையாக வைத்திருந்தான் என்று? இந்த செங்கோலை கொண்டு வந்து இந்த இடத்திலே வைத்ததன் மூலம் இந்த நாட்டுப் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? வேதனையாக இருக்கிறது
இந்த இடத்திலே நாங்கள் மீண்டும் பதிவு செய்ய விரும்புகின்றோம்" என்று தெரிவித்த நிலையில்
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மதுரை மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்- க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக பாராளுமன்றத்தில் பேசிய சு வெங்கடேசனை கைது செய்ய வேண்டும் என கண்டன கோஷங்களையும் எழுப்பினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி