மதுரை செல்லூர் பகுதியில் நேற்று இரவு மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன் மற்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் தீவிர பரப்பரை மேற்கொண்டனர்.
பரப்புரைக் இடையே பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்ட இருவரும் தொண்டர்கள் வேண்டுகோளுக்கிணங்க சிலம்பம் சுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனை கண்ட பொதுமக்கள் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் திரளாக பங்கேற்றனர்.