அரசு உதவி பெறும் பள்ளிகளில் நூலகம் கூடாதா? - நீதிபதி கேள்வி

53பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை செயின்ட் மேரீஸ் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நூலகராக பணிபுரிந்தவர் பணி ஓய்வு பெற்றார்.

நூலகராக 2019 ல் ஜெயஸ்ரீ நியமிக்கப்பட்டார். இதற்கு பள்ளி நிர்வாகம் பள்ளிக் கல்வித்துறையிடம் ஒப்புதல் கோரியது. தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் நிராகரித்தார். அதை ரத்து செய்து ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி பள்ளி தாளாளர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

தனி நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தாளாளர் மேல்முறையீடு செய்தார்.


விசாரித்த நீதிபதிகள் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் நிலைப்பாடு இத்தகையதாக இருந்தால், கீழ்க்கண்ட கேள்விகள் எழுகிறது. இனிமேல் மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் நூலகம் இருக்காது என்பது தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கொள்கை முடிவாக உள்ளதா, எந்த அரசுப் பள்ளியிலும் நூலகம் கூடாது என்பது மாநில அரசின் கொள்கை முடிவாக இருந்தால், இன்னும் பல லட்சம் மாணவர்கள் அவற்றை நம்பி படித்து வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் நூலகம் மற்றும் நூலகர்கள் அல்லது நூலக உதவியாளர்கள் இருக்க வேண்டும் எனில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக அதே நடைமுறையை ஏன் பின்பற்றக்கூடாது என்பதற்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், இயக்குனர், சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜூன் 13 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி