ஜூன் 10-ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது: முன்னேற்பாடு தீவிரம்
மதுரை மாவட்டத்தில் ஜூன் 10-ஆம் தேதி திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தூய்மைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 6- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால்
மக்களவைத் தோ்தல் முடிவுகள், அதிக வெப்பம் காரணமாக ஜூன் 10- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மீண்டும் அறிவிக்கப்பட்டது. வருகிற திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
எனவே, மதுரை மாநகராட்சிப் பள்ளிகள், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தூய்மைப் பணிகள், சீரமைப்புப் பணிகள் உள்பட முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.