பட்டதாரி மாணவனிடம் வழிப்பறி - இருவர் கைது

84பார்த்தது
பட்டதாரி மாணவனிடம் வழிப்பறி - இருவர் கைது
மதுரை மாட்டுத்தாவணி அருகே பட்டதாரி மாணவரை தாக்கி செல்போன் பறிப்பு, பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் கைது.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பள்ளப்பட்டி ரோடு முருகன் காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் மாரிமுத்து 21. இவர் பிஎஸ்சி பிசினஸ் அசிஸ்டன்ட் பட்டம் பெற்றுள்ளார். இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக மதுரை வந்துள்ளார்.

அவர் மாட்டுத்தாவணி அருகே லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்து இன்டன்சிப் பயிற்சிக்கு சென்று வந்தார். அவர் இரவு கடையில் சாப்பிட்டு விட்டு தான் தங்கி இருக்கும் லாட்ஜிற்கு நடந்து சென்றார். அவர் சுந்தரம் பார்க் இரண்டாவது கேட் அருகே சென்றபோது இரண்டு நபர்கள் பைக்கில் வந்தனர். அவர்கள் மாணவர் மாரிமுத்து வை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மாணவர் மாரிமுத்து மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் அவனியாபுரம் வள்ளல் ஆனந்தபுரம் முனியசாமி மகன் ஆகாஷ் ரகுபதி 23, அவனியாபுரம் பிரசன்னா காலனி அய்யனார் கோவில் தெரு நல்லதம்பி மகன் அழகர் 25 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி