கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற வீதிமீறல்கள் குறித்த அறிக்கை

81பார்த்தது
கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற வீதிமீறல்கள் குறித்த அறிக்கை
மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற வீதிமீறல்கள் குறித்து ஆராய்ந்த குழுக்கள் தனது அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தது.

அந்த அறிக்கைகளை ஆராய்ந்து அரசுக்கு தக்க பரிந்துரை செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் முனைவர் ப. ஜோதிமணி அவர்களின் தலைமையில், பாஸ்கரன், கூடுதல் பொது இயக்குநர் (ஓய்வு) இந்திய புவியியல் ஆய்வு கழகம் மற்றும் சு. சுதர்சனம், கூடுதல் இயக்குநர் (ஓய்வு), புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆகியோர்களை நிபுணர் உறுப்பினர்களாக கொண்ட உயர்மட்ட சிறப்புக் குழு கடந்த 20. 02. 2023 அன்று அமைக்கப்பட்டது.

நீதியரசர் தலைமையிலான இக்குழு மதுரை மாவட்டத்தில் 83 கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற வீதிமீறல்கள் தொடர்பான தனது அறிக்கையினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களிடம் இன்று (10. 07. 2024) தலைமைச் செயலகத்தில் அளித்தது.

இந்நிகழ்வில் இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) க. பணீந்திர ரெட்டி, இ. ஆ. ப. , மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் எ. சரவணவேல்ராஜ், இ. ஆ. ப. , ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி