மதுரை கலைஞர் நூலகத்தில் மழை நீர்

76பார்த்தது
மதுரை கலைஞர் நூலகத்தில் மழை நீர் - பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என நூலக நிர்வாகம் விளக்கம்

மதுரையில் நேற்று முன்தினம் (மே 19) அன்று பிற்பகலில் பெய்த கனமழையால் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கீழ் தளத்தில் உள்ள பார்வையற்றோர் பிரிவு மற்றும் கலைக்கூடத்தில் மழைநீர் புகுந்து பார்வையாளர்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாயின.

நூலகத்தில் மொட்டை மாடியிலிருந்து மழை நீர் பைப் வழியாக தரைத்தளம் வந்து, முன்கூடத்தின் கீழே உள்ள தொட்டியில் சேகரமாகி பின்னர் வெளியே வரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

நூலகம் அமைந்துள்ள தல்லாகுளம் பகுதியில் அன்றைய தினம் மிக அதிகமாக 108 மிமீ மழை பெய்துள்ளது. இதனாலேயே தரைத்தளத்தில் தொட்டியிலிருந்து மழைநீர் பொங்கி வெளியேறியதாகவும், உடனடியாக நீர் வெளியேற்றப்பட்டு, மீண்டும் இதுபோல நிகழாமல் இருப்பதற்கு பெரிய அளவிலான பைப் பொருத்தப்பட்டு விட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இதனால் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக வரும் செய்தியில் உண்மையில்லை எனவும், குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி முகாம்களும், வாசகர்களுக்கான அனுமதியும் பாதிக்கப்படவில்லை என்றும் நிர்வாகத்தினர் விளக்கமளித்தனர்.

தொடர்புடைய செய்தி