மருத்துவமனை முன்பாக உணவு வழங்கியதில் தள்ளுமுள்ளு

79பார்த்தது
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஸ்டார் நண்பர்கள் என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் மதிய உணவு கடந்த 200நாட்களுக்கு மேலாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை சம்பவம் எதிரொலியாக மருத்துவமனை வெளிபகுதியில் உரிய பாதுகாப்புடன் தன்னார்வலர்கள் உணவு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் ஸ்டார் நண்பர்கள் அறக்கட்டளையினர் உணவுகளை வழங்கும் வாகனத்தை நிறுத்தியபோது அங்கு வந்த மக்கள் உணவுகளை வளாகத்திற்குள் வழங்க வேண்டும் என கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வரிசையாக மக்களை நிறுத்தி உணவுகளை வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கிய நிலையில் உணவுகளை வழங்கத் தொடங்கிய போது ஒரே நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


இதனால் கூட்ட நெரிசலில் குழந்தைகளுடன் பெண்கள் சிக்கித் தவித்தனர். இதனால் திடீரென வாகனத்தை எடுத்துச் சென்றபோது வாகனத்தின் பின்பாக கைகளை ஏந்தியபடி பொதுமக்கள் மருத்துவமனை சாலைகளில் ஓடிச்சென்றனர்.

இதனால் மருத்துவமனைக்கு வரக்கூடிய ஆம்புலன்ஸ்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. காவல்துறையினர் மருத்துவமனை வாசலை மறைத்து உணவுகள் வழங்க வேண்டாம் என அறிவுறுத்திய நிலையிலும் அதே பகுதியில் வாகனத்தை நிறுத்தியது ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி