திடீரென அசைவ உணவுகளை கைவிட்டு சைவ உணவுகளுக்கு மாறும் போது, ருசியில் பெரும் மாற்றத்தை உணர்வோம். சிலருக்கு பத்திய சாப்பாட்டை சாப்பிடுவது போல இருக்கும். பெரும்பாலும் இறைச்சி உணவு சாப்பிடுபவர்களுக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். எனவே இறைச்சி உணவை கைவிடும் போது உடல் சூடு குறையும். இறைச்சி மற்றும் முட்டைகளில் புரதச்சத்து மிகுதியாக இருக்கின்றது. எனவே, சைவத்திற்கு மாறினால் அதற்கேற்ற புரதச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.