எஸ்டிபிஐ கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

81பார்த்தது
மதுரையில் 3 குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஒன்றிய அரசு சமஸ்கிருதத்தில் சட்டங்களின் பெயர்களை மாற்றி அரசியலமைப்பு, மனித உரிமைக்கு விரோதமாக, கறுப்புச் சட்டங்களை உள்ளடக்கி, சட்ட வல்லுநர்கள், மக்களின் கருத்துக்களை கேட்காமல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 3
புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய் கோரி செய்ய கோரி மதுரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அருகே இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது அவர்கள் கண்டன உரை ஆற்றினார்
மாவட்ட தலைவர் A. பிலால்தீன்
தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், பொதுச் செயலாளர் ஜியாவுதீன், தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல்ஹமீது, அமைப்பு பொதுச்செயலாளர் பக்ருதீன், தெற்கு மாவட்ட பொது செயலாளர் சிராஜ்தீன் ஆண்கள் பெண்கள் உள்பட நூற்றுக்கு மேற்பட்டோர் எஸ்டிபிஐ கட்சியினர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி