ஒயிலாட்டத்தை ஆர்வத்துடன் கற்று மகிழ்ந்த மக்கள்

79பார்த்தது
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் இலவச ஒயிலாட்ட பயிற்சி 3 நாட்கள் வழங்கப்படுகிறது.

இன்று தொடங்கிய ஒயிலாட்ட பயிற்சியில் 7 வயது முதல் 75 வயது வரையிலான சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு ஒயிலாட்டத்தை ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர்.


இன்றைய தலைமுறையினர் குழந்தைகள் அதிக அளவில் செல்போன் பயன்பாட்டிற்கு அடிமையாகிவருகின்றனர். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வது உறவினர்களோடு சேர்ந்திருப்பது உள்ளிட்ட நினைவுகளை மறந்து வருகின்றனர்.

பாரம்பரிய நாட்டுப்புறக்கலைகளை இன்றைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் முதல் நாள் பயிற்சியில் மதுரை ஆனையூரை சேர்ந்த கலைமணி தங்கப்பாண்டி தலைமையில் ஒயிலாட்ட பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு முறைப்படி ஒயிலாட்டம் பயிற்சி அளிக்கப்பட்டது, சபை வணக்கம், குரு வணக்கம், பூமாதேவி வணக்கம் மற்றும் 2 நடைகள் பயிற்சிகளாக வழங்கப்பட்டது. பறை இசைக்கு ஏற்ப பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் ஆர்வமுடன் இசைக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி