மதுரை அருகே சிந்தாமணி பகுதியில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
மதுரை அருகே சிந்தாமணி முயல் அப்பளம் கம்பெனி, இண்டியன் கேஸ் கிட்டங்கி அருகே நேற்றிரவு 11 மணியளவில் சிந்தாமணி, அனுப்பானடி குறுக்கு ரோடு , ஓம் முருகா நகரில் 4 வது சந்தில் வசிக்கும் அர்ஜுனன் மகன் நாகராஜன் (42) என்பவர் மது போதையில் இடது கண் பட்டையில் காயத்துடன் மற்றும் மூக்கில் இரத்தம் வடிந்த நிலையில் அப்பள கம்பெனி முன்பு படுத்திருந்தவரை அப்பள கம்பெனி உரிமையாளர் பார்த்து 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்து பரிசோதித்த போது உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் போதையில் கீழே விழுந்து அடிபட்டு இறந்தாரா? அல்லது யாராவது அடித்ததில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தாரா? என்று கீரைத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.