மாடு முட்டியதில் முதியவர் காயம் - அச்சத்தில் பொதுமக்கள்

62பார்த்தது
சாலையில் சுற்றி திரிந்த மாடு முட்டியதில் முதியவர் காயம் - அரசு மருத்துவமனையில் அனுமதி - அச்சத்தில் பொதுமக்கள்மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ஊராட்சிமன்ற அலுவலகத்தின் முன்பாக சாலையில் சுற்றி திரிந்த மாடு திடிரென மிரண்டு ஓடி சாலையில் சென்றுகொண்டிருந்த முதியவரை முட்டி தள்ளியதில் கீழே விழுந்து முதியவருக்கு படுகாயம் அடைந்தார். அவரா மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து ஒத்தக்கடை காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையில் சுற்றிதிரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தொடரும் விபத்துகள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி