நரசிம்ம ஜெயந்தி விழா

70பார்த்தது
சௌபாக்கியா விநாயர் ஆலயத்தில், நரசிம்ம ஜெயந்தி விழா:



மதுரை அண்ணா நகர், மேலமடை, தாசில்தார் நகர், சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், நரசிம்ம
ஜெயந்தி விழா நடைபெற்றது. இதை ஒட்டி, இக்கோவில் அமைந்துள்ள நரசிம்மருக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் அர்ச்சனைகள் நடைபெற்றது. நரசிம்மருக்கு, அவரது ஜெயந்தியை முன்னிட்டு, பால், இளநீர் , மஞ்சள், போன்ற திரவியங்களால், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்காரமாகி அர்ச்சனைகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள்
கலந்து கொண்டனர்.

இதை அடுத்து, நரசிம்மர் மற்றும் சக்கத் தாழ்வாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவில் நிர்வாகத்தின் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் மகளிர் ஆன்மீக குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக, இன்று செவ்வாய்க்கிழமை முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள பால
முருகனுக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

முருகப்
பெருமானுக்கு சிறப்பு அர்ச்சனைகள் தீபாராதணைகள் நடைபெற்றது.
தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலும், முருகனுக்கு பக்தர்கள் சார்பில் பால், மஞ்சள் பொடி போன்ற பொருள்களால், அபிஷேகம் நடைபெற்றது. கோயில் அர்ச்சகர்
குப்பு லால் லால், சிறப்பு பூஜைகளை செய்தார்.

தொடர்புடைய செய்தி