மதுரை பிரதமராக மூன்றாவது முறையாக மோடி பொறுப்பேற்றதை நேற்று மதுரை மேற்கு தொகுதி பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மதுரை பெத்தானியாபுரம் பகுதி சந்திப்பில் நேற்று மாலை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். மதுரை நகர் பொதுச் செயலாளர் டி எம் பாலகிருஷ்ணன் மாநில ஐடிஐ துணை பொது செயலாளர் விஷ்ணு பிரசாத் மண்டல தலைவர் ரங்கராஜ் நிர்வாகிகள் சக்திவேல் கிருஷ்ணகுமார் பழனிவேல் ராதா பங்கேற்றனர் ஏராளமான பாஜக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.