மதுரையில் இன்று நடந்த இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் மதுரை சங்க விழாவில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார்.
மதுரை காமராசர் சாலையில் உள்ள தமிழ்நாடு வர்த்தக கூட்டமைப்பு அரங்கத்தில் இன்று'தமிழ்நாடு இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் ' கூட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள "மதுரை நியூஸ் இருசக்கர மோட்டார் மெக்கானிக் தொழிலாளர் சங்கத்தின் " 20 ஆம் ஆண்டு விழாவில் மாநில அளவில் கல்விக்கான ஊக்கத்தொகை மற்றும் மதுரை அளவிலான நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகளை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
உடன் சங்க நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்